மராட்டிய மாநிலம் நேன்டட் மாவட்டம் போர்கோன் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஷங்கர் அபன்ராவ் கிஷிர்சாகர் (46), மழை பொய்த்ததால் சோயாபீன் சாகுபடி பாதிக்கப்பட்டு கடும் நிதி நெருக்கடியில் சிக்கினார். தனது மகளின் மருத்துவக் கல்லூரி கல்விக் கட்டணத் தள்ளுபடி கேட்டு அவர் விண்ணப்பித்த நிலையில், அது கிடைக்காததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். பின்னர், தனது நிலையை வீடியோவாகப் பதிவு செய்துவிட்டு, வயலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கல்விக் கட்டணத் தள்ளுபடி கிடைக்காத விரக்தி- விவசாயி தற்கொலை
