Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முன்விரோதம்….விவசாயி குத்திக்கொலை… திருச்சி அருகே பரபரப்பு

முன்விரோதம்....விவசாயி குத்திக்கொலை-திருச்சி அருகே பரபரப்பு


திருச்சியை அடுத்த லால்குடி முள்ளால் மாரியம்மன் கோவில் தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் அபிமன்னன் (47) விவசாயி இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே குடிபோதையில் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று காலை
அவரை சிலர் சுற்றி வளைத்து சரமாரியாக கத்தியால் குத்தினர். இந்த சம்பவத்தில் அபிமன்னன் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி அவரது உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் கள்ளக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாக்குலின் மற்றும் போலீசார சம்பவ இடம் விரைந்து சென்று அபிமன்னன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே இந்த கிராமத்தில் குடிபோதை தகராறில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அந்த விவகாரத்தில் அபிமன்னனை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். விவசாயி சரமாரியாக குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம்
லால்குடி கிராம பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!