Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தமிழக விவசாய சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் மாநில துணைத்தலைவர் சுகுமாரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஜெயபால் மாவட்ட செயலாளர் யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும். அதேபோல் நகைக்கடமையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். உரம் விலையை குறைக்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் மாநில துணைத்தலைவர் சுகுமாரன் அளித்த பேட்டியில் கூறியதாவது:

புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் விவசாயிகள் ஐந்து ஏக்கர் விவசாய நிலம் வைத்திருந்தால் பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். அதேபோல் ஐந்து ஏக்கருக்கு மேல் வைத்திருந்தால் 50 சதவீத பயிர் காலங்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தது. ஆனால் தற்போது அறிவித்துள்ள நகை கடன் தள்ளுபடி என்பது விவசாயிகளுக்கு முற்றிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. அதேபோல் உர விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கு மாநில அரசு அழுத்தம் தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

error: Content is protected !!