இருசக்கர வாகனம் மோதி முதியவர் சாவு
சைக்கிளில் சென்றபோது விபரீதம்…
திருச்சி திருவானைக்கோவில் மேல கொண்டையம்பேட்டை கீழத்திருவை சேர்ந்தவர் பாலு பெரியண்ணன் (வயது 83 ) இவர் நேற்று முன் தினம் கொண்டையம்பேட்டை சர்வீஸ் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக பாலு பெரியண்ணன் மீது மோதியது. இந்த விபத்தில் அவர் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து ஆபத்தான நிலையில் பாலு பெரியண்ணன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பெற்று வந்த பாலு பெரியண்ணன் இன்று விடியற்காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெவ்வேறு சம்பவங்களில்
திருச்சியில் போதை மாத்திரை விற்பனை செய்த மூன்று பேர் கைது
ரவுடிக்கு வலைவீச்சு
திருச்சி பாலக்கரை ஆலம் தெரு பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாலக்கரை சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்பொழுது போதை மாத்திரை விற்பனை செய்து கொண்டு இருந்த முதலியார் சத்திரம் பகுதி சேர்ந்த சுனில் (வயது 25), பாலக்கரை எட த் தெரு பகுதியை சேர்ந்த அஜித் கில்டன் (வயது 28) எடத்தெருவை சேர்ந்த ஹரிஷ் ராஜேந்திரன் (வயது 19) ஆகிய மூன்று பேரை போலீசார் பிடிக்க முயன்றனர் எ இதில் ஹரிஷ் ராகவேந்திரன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இதையடுத்து சுனில், அஜித் கில்டன் ஆகிய இரண்டு பேரை பாலக்கரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளை பறிமுதல் செய்துள்ளனர்.ஹரிஷ் ராகவேந்திரனைதேடி வருகின்றனர். இவர் ரவுடி பட்டியலில் உள்ளார்.
இதே போன்று உறையூர் மேட்டு தெரு பூங்கா அருகில் போதை மாத்திரை விற்பனை செய்த உறையூர் பாத்திமா நகரை சேர்ந்த முகமது சித்திக் (வயது 20) என்பவரை சப்-இன்ஸ்பெக்டர் ஐயப்பன் வழக்கு பதிந்து கைது செய்து அவரிடமிருந்து போதை பொருள் மற்றும் செல்போனை பறிமுதல் செய்துள்ளனர்.
