Skip to content
Home » தஞ்சை அருகே விவசாயிகள் சாலை மறியல்

தஞ்சை அருகே விவசாயிகள் சாலை மறியல்

பருவம் தவறி பெய்த மழை காரணமாக தஞ்சை டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா  பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கிடக்கிறது. இதற்கு நிரவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, உணவுத்துறை முதன்மை செயலாளர்  டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று டெல்டா மாவட்டங்களில்  சேதமடைந்த பயிர்களை நேரில் பார்வையிட்டு விவசாயிகளிடம் சேத விவரங்கள் குறித்து கேட்டனர்.

திருவோணம் பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் பார்கை்கவில்லை. இதனால் தங்களுக்கு நிாவரணம் கிடைக்காமல் போய்விடும்.எனவே எங்கள் பகுதிக்கும் அமைச்சர் வந்து ஆய்வு செய்ய வேண்டும் என கேட்டு இன்று  தஞ்சை அடுத்த ஊரணிபுரத்தில் விவசாயிகள் சாலை மறியல் செய்தனர். திருவோணம் வட்டார  விவசாயிகள் நலசங்க தலைவர் சின்னதுரை தலைமையில் இந்த மறியல் நடந்தது. தகவல் அறிந்ததும்  ஊரணிபுரம் தாசில்தார் சம்பவ இடத்துக்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து  மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியல் காரணமாக சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!