Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தாயை தாக்கிய தந்தை உயிரிழப்பு…

குளித்தலை அருகே நச்சலூர் தாட்கோ காலணியில் குடும்ப தகராறில் தாயை தாக்கிய தந்தையை திரும்பி இரும்பு கம்பியால் தாக்கியதில் தந்தை சம்பவ இடத்தில் உயிரிழப்பு. தாய்,மகனும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை நங்கவரம் போலீசார் விசாரணை.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே நச்சலூர் தாட்கோ காலனி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயக் கூலி தொழிலாளி மோகன்ராஜ் வயது 47. அவரது மனைவி பூவாயி இவர்களுக்கு ஹரிதா மகளும், எலெக்ட்ரிசியன் வேலை செய்து வரும் மணிகண்டன் 21 என்ற மகனும் உள்ளனர்.

ஹரிதா திருமணம் ஆகி தனது கணவர் வீட்டில் வசித்து வருகிறார்.

தினந்தோறும் மோகன்ராஜ் மது குடித்துவிட்டு மனைவி பூவாயை தாக்கி தகராறு செய்து வருவது வாடிக்கையாக இருந்து வந்தது.

26 தேதி இரவு கணவர் மோகன்ராஜ் மனைவி பூவாயி கழுத்தில் அணிந்திருந்த தாலியை பறித்து தாக்கினார்.

அப்போது மோகன்ராஜ் பூவாயியை மீது மிளகாய் பொடி தூவி தாக்க முற்பட்டுள்ளார். அப்போது மகன் மணிகண்டன் தடுக்க முயன்ற போது இருவரையும் தாக்கியுள்ளார்.

அப்போது மணிகண்டன் தந்தையை அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து தலையில் தாக்கியதில் மயங்கி விழுந்தார்.

மோகன்ராஜ் தாக்கியதில் மனைவி பூவாயி மகன் மணிகண்டன் இருவருக்கும் உள் காயம் ஏற்பட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

அருகில் இருந்தவர்கள் வெகு நேரமாக மோகன்ராஜ் படுத்து நிலையில் இருந்ததால் சந்தேகத்தின் பேரில் பொதுமக்கள் மோகன்ராஜை சத்தம் போட்டு எழுப்ப முயற்சி செய்தபோது பார்த்தபோது தலையில் ரத்தம் சிதறியும் இறந்து கிடப்பது தெரியவந்தது .

இதுகுறித்து உயிரிழந்த மோகன்ராஜ் உறவினர்கள் நங்கவரம் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பெயரில் நங்கவரம் போலீசார் உயிரிழந்த மோகன்ராஜ் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

காயம் அடைந்த மனைவி பூவாயி மகன் மணிகண்டன் இருவரும் குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

இருவரும் தப்பி செல்லாத வகையில் போலீஸார்கள் பாதுகாப்பு பணியில் இருந்து வருகின்றனர்.

error: Content is protected !!