உ.பி.யில் 11 மாத குழந்தையை பெற்ற தந்தையே யமுனா நதியில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலத்தில் நின்ற படி குழந்தையுடன் செல்ஃபி எடுக்கிறேன் எனக் கூறி வாங்கியவர், தூக்கி வீசியுள்ளார். அதைத் தொடர்ந்து மனைவியையும் தள்ளி விட முயற்சித்துள்ளார். அப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் கொடூர தந்தையை தடுத்து, சரமாரியாக தாக்கினர். தற்போது குழந்தையைத் தேடும் பணி நடைபெறுகிறது.
