Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சாக்கடைக்குள் சடலமாக கிடந்த பெண் சிசு… திருச்சியில் பரபரப்பு

சாக்கடைக்குள் சடலமாக கிடந்த பெண் சிசு... திருச்சியில் பரபரப்பு

திருச்சி பெரிய கடைவீதி பகுதி, திப்புரான் தொட்டி தெரு பகுதியில் இன்று காலை 8.45 மணிக்கு துப்புரவு பணியாளர்கள் சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர் அப்பொழுது சாக்கடையில் பிறந்த குழந்தை அழுகிய நிலையில் இறந்து கிடந்தது.இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த துப்புரவு பணியாளர்கள் உடனடியாக கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் தகவல் அறிந்து கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாக்கடையில் அழுகிய நிலையில் பிறந்து இறந்து கிடந்த
குழந்தையின் உடலைகைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து பிறந்த பிறந்த இறந்த குழந்தையை சாக்கடையில் தூக்கி வீசி சென்ற மர்ம ஆசாமி யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் சாக்கடையில் பிறந்த சில மணி நேரமான குழந்தை இறந்த நிலையில் கிடந்தது அந்தப் பகுதியில் வெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!