Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பெண் திடீர் மயக்கம்

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பெண் திடீர் மயக்கம்

கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பெண் திடீர் மயக்கம் ! மாவட்ட ஆட்சியர் முன்பே மயக்கம் அடைந்த மூதாட்டியால் பரபரப்பு.

கரூர் தாந்தோன்றிமலை பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள்

குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் முத்துக்குமரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி வள்ளியம்மாள் என்ற பெண் மனு அழித்த நிலையில் அந்த மனு நிராகரிப்பு செய்ததை எடுத்து மீண்டும் மனு அளிக்க வந்திருந்தார்.

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக அலுவலகத்திற்குள் நுழைந்தபோது, திடீரென வள்ளியம்மாள், மாவட்ட ஆட்சியர் முன்பே மயங்கி கீழே விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து சிறிது நேரம் தாமதம் ஏற்பட்ட நிலையில், அங்கிருந்தவர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் வள்ளியம்மாளை சர்க்கர நாற்காலியில் அமர வைத்து அருகிலுள்ள அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

தொடர்ந்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பெண் திடீரென மயங்கி விழுந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

error: Content is protected !!