திருச்சி இனாம் புலியூர் கீரிக்கல்மேடு எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (42) இவர் சந்தை ரைஸ் மில் பகுதியில் உரக்கடை வைத்து நடத்தி வந்தார். குடும்ப தகராறு காரணமாக சமீப காலமாக மனைவியைப் பிரிந்து தனியாக வசித்து வந்தார். பின்னர் மன உளைச்சலில் லோகநாதன் யாரும் எதிர்பாராத வகையில் கீரிக்கல் மேடு புதுகை காடு பகுதியில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். பின்னர் உறவினர்கள் அவரை மீட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர் இருந்தபோதிலும் சிகிச்சை பலனளிக்காமல் லோகநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி ரம்யா கொடுத்த புகாரின் அடிப்படையில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தீராத வயிற்று வலியால் பெண் தற்கொலை…
திருச்சி, வாழவந்தான் கோட்டை பொன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்.இவரது மனைவி அம்சவேணி (42). இவர் சமீப காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். குறிப்பாக வயிற்று வலி அவரை பாடாய்படுத்தியது இதற்காக நாட்டு மருந்து எடுத்து வந்தார். இருந்த போதிலும் நோயின் பிடியிலிருந்து முழுமையாக மீள முடியவில்லை. பின்னர் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளான அம்சாராணி யாரும் எதிர்பாராத வகையில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். இது குறித்து அவரது கணவர் சுப்பிரமணியன் கொடுத்த புகாரின் அடிப்படையில் துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
