Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கும்பகோணம்…… பெருநாள் சந்திப்பு விழா

கிஸ்வா மற்றும் ஜமாத்  ஆதே இஸ்லாமி ஹிந்த் இணைந்து நடத்திய பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி கும்பகோணம் தூய அலங்கார அன்னை பேரவை வளாகத்தில் நடைபெற்றது.கிஸ்வா தலைவர் பி.எஸ்.யூசுப் தலைமை வகித்தார்.

ஜமாத்ஆதே இஸ்லாமி ஹிந்த் கும்பகோணம் கிளை தலைவர் அப்துல் கலாம் ஆசாத், மாவட்ட அமைப்பாளர் முகம்மது யூனூஸ்,
கிஸ்வா செயலாளர் ஜாகிர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக சூரியனார் கோயில் ஆதீனம் குருமகா சந்நிதானம் மகாலிங்க தேசிக பரமாச்சாரியா சுவாமிகள், கும்பகோணம் பேரவை பங்குத்தந்தை மற்றும் மறை மாவட்ட முதன்மை தந்தை பிலோமின்தாஸ் ஆகியோர் சமய நல்லிணக்கம் பற்றி சிறப்புரை நிகழ்த்தினர்.
பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி ஏன் என்பதைப் பற்றியும், ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில ஆலோசனை குழு உறுப்பினர் முகமது அமீன், முனைவர் ஞானசேகரன் விளக்கினர்.
இதில் அனைத்து சமுதாய பிரமுகர்கள், கிஸ்வா நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள்,
ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் நிர்வாகிகள், கும்பகோணம் தொழிலதிபர்கள், வணிகர் நலச் சங்க நிர்வாகிகள், வர்த்தக பிரமுகர்கள் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.கிஸ்வா செயலாளர்
திட்டக் குழு தலைவர் அக்பர் அலி நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!