Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தண்டவாளம் அருகே பட்டம் விட்டால் 6 மாதம் சிறை: ரயில்வே கடும் எச்சரிக்கை

ரெயில்வே தண்டவாளங்கள், மின்சாரப் பாதைகளுக்கு அருகில் பட்டம் விடுவதை தவிர்க்க வேண்டும் என்று சென்னை ரெயில்வே கோட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சென்னை ரெயில்வே கோட்டம் தரப்பில் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டிருப்பதாவது;
“உயர் அழுத்த மின்சாரப் பாதைகளுக்கு அருகில் பட்டம் விடுவது என்பது விளையாட்டல்ல. அது உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் செயல். 25000 வோல்ட் மின்சாரம் பாயும் கம்பி மீது பட்டம் விடும் நூல் சிக்கினால் பட்டம் விடுபவர் மீது மின்சாரம் பாயும். தண்டவாளம் அருகே பட்டம் விடுபவர்களுக்கு 6 மாதம் சிறை அல்லது ரூ.1000 அபராதம் விதிக்கப்படும்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!