சென்னை தலைமைச் செயலகத்தில் திடீர் ஃபயர் அலாரம் – அச்சமடைந்த ஊழியர்கள்
ஆயுத பூஜை கொண்டாட்டத்தின்போது புகை வெளியேறியதால் ஃபயர் அலாரம் ஒலித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நாளை முதல் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை என்பதால், சென்னை தலைமைச் செயலகத்தில்

இன்று பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் ஆயுத பூஜை கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சிலர் கற்பூரம் ஏற்றுவது உள்ளிட்ட பூஜை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதிலிருந்து வெளியான புகை காரணமாக, தலைமைச் செயலகத்தில்

பொருத்தப்பட்டிருந்த தீ எச்சரிக்கை கருவி (Fire Alarm) திடீரென செயல்பட்டுள்ளது.
ஐந்து நிமிடங்களுக்கும் மேலாக அபாய எச்சரிக்கை ஒளி மற்றும் அலாரம் செயல்பட்டதால், அங்கிருந்த அரசு ஊழியர்கள் அச்சமடைந்து கட்டடத்தை விட்டு வெளியே வந்து நின்றனர்.
இதனால் தலைமைச் செயலக வளாகத்தில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது..
