Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வெள்ளலூர் குப்பை கிடங்கில் தீ விபத்து… அமைச்சர் விக்னேஷ் ஆய்வு

Fire at Vellalur dump yard – Minister

கோவை மாநகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் பெருமளவில் குவிக்கப்படும் வெள்ளலூர் குப்பை கிடங்கின் ஒரு பகுதியில் இன்று தீ விபத்து ஏற்பட்டது.

கிடங்கில் நீண்ட காலமாக தேங்கியிருந்த பழைய குப்பைகள் குவிக்கப்பட்டிருந்த பகுதியில் திடீரென தீப்பற்றியது. இதனால் அப்பகுதியில் புகைமூட்டம் ஏற்பட்டது.

தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தீ மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியை துரிதப்படுத்தினர்.

இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த அமைச்சர் விக்னேஷ், மாநகராட்சி மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து தீயை விரைந்து அணைத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி, தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார்.

error: Content is protected !!