கரூரில் மாநகராட்சி குப்பை கிடங்கில் இரவு நேரத்தில் தீ விபத்து – தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை

கிடங்கு கரூர் – வாங்கல் சாலையில் உள்ள அரசு காலணி அருகே உள்ளது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட 48 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு சேகரிக்கப்பட்டு மலை போல் காட்சிகளிக்கின்றன.
இந்நிலையில் நேற்று இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
காற்றின் காரணமாக குப்பையில் பற்றிய தீ மளமளவென பரவி எரிய துவங்கியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கரூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் இரண்டுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனம் மற்றும் லாரி மூலம் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் வாங்கல் சாலை வழியாக நாமக்கல், சேலம் செல்லும் வாகன ஓட்டிகள் புகைமூட்டம் காரணமாக மூக்கை மூடிக் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக மாநகராட்சி குப்பை கிடங்கில் அடிக்கடி விபத்து ஏற்பட்டது வருவதால் குப்பை கிடங்கை சுற்றியுள்ள பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
