Skip to content
Home » தீயணைப்பு நிலையங்களில் ரோபோ.. டிஜிபி ஆபாஷ்குமார் தகவல்..

தீயணைப்பு நிலையங்களில் ரோபோ.. டிஜிபி ஆபாஷ்குமார் தகவல்..

தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் கடந்த 18ம்தேதி தொடங்கி நடைபெற்றுவந்தது. தமிழகம் முழுவதும் இருந்து 5 மண்டலங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போட் டியில் பங்கேற்றிருந்தனர். இதில் வட வடக்கு மண்டலம் ஒட்டுமொத்த சாம்பியன் பட் டத்தையும், இரண்டாவது இடத்தை மத்திய மண்டல மும், மூன்றாவது இடத்தை * தென் மண்டலமும் தக்க வைத்தது. மேலும் சிறந்த தீயணைப்பு நிலையத்திற்கான – பரிசை திருச்சி மத்திய மண்டல தீயணைப்பு நிலையம் தட்டிச் சென்றது. தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை இயக் குனர் ஆபாஷ்குமார் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி பாராட்டினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது… தமிழ்நாடு தீயணைப்பு ‘மீட்புப் பணிகள் துறை இயக் குனர் தமிழகத்தில் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு புதிதாக ரோபோ, பைபர் படகு உள்பட நவீன இயந்தி ரங்கள் வாங்கி பயன்பாட் டிற்கு கொண்டு வரப்படுவது டன், தீயணைப்புத்துறையில் நிறைய மாற்றங்கள் கொண் டுவரப்படும். சென்னை மற் றும் தென் மாவட்டங்களில் நிகழ்ந்த மழை வெள்ள -பாதிப்புகளில் தீயணைப்பு வீரர்கள் சிறப்பாக செயல்பட் டதற்கு முதல்வர் பாராட்டு தெரிவித்தார். பட்டாசு குடோன்களில் மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஆய்வு
செய்ய  அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!