Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் அருகே குப்பை கிடங்கில் தீ…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டி பகுதியில் 27 வார்டுகள் உள்ளன. இங்கு தூய்மை பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படும் குப்பைகள் தெற்கு தெரு பகுதியில் அமைந்துள்ள நகராட்சி குப்பை கிடங்கில் சேமித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் நகராட்சி குப்பை கிடங்கில் மர்ம நபர்கள் தீவைத்து சென்றுள்ளனர். இதனால் தீ பற்றி எறிய ஆரம்பித்து அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. அருகில் இருந்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலிறிந்து தீயணைப்பு துறையினர் ஒரு வாகனத்தில் வந்த  தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டுவர முயன்றனர். தண்ணீர் தீர்ந்து விட்டதால் மீண்டும் தண்ணீர் நிரப்பிய பின்னர் சுமார் 4 மணி நேரத்தில் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்

அரவக்குறிச்சி பகுதியில் ஒரே ஒரு தீயணைப்பு வாகனம் மட்டும் உள்ளதால் தீயை அணைக்க நீண்ட நேரமாகி விட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!