தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து திமுக கட்சி சார்பில் தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக மேயர் ராமநாதன் போட்டியிடுகிறார், இந்நிலையில் தஞ்சாவூர் மாநகராட்சியில்
மேயராக கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4 ந்தேதி பதவி ஏற்று கொண்ட கவுன்சிலர் இராமநாதன் மேயராக பதவி வகித்த நிலையில், திமுக சட்டமன்ற வேட்பாளராக தற்போது அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து தனது 45 வது வார்டு கவுன்சிலர் மற்றும் மாநகராட்சி மேயர் பதவியை ராஜினாமா செய்து மாநகராட்சி கமிஷனர் கண்ணனிடம் அதற்கான கடிதத்தை வழங்கினார். பின்னர் கண்கலங்கியவரே மாநகராட்சி ஊழியர்கள், பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து சென்றபோது மாநகராட்சி காவலர் ரவி என்பவருக்கு சால்வை அணிவித்து கண்கலங்கியபடியே விடைபெற்று சென்றார்
