Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

யோகிபாபு நடித்த புதிய படத்தின் பர்ஸ்ட் லுக்

தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம்வருபவர் யோகி பாபு. ரஜினி, அஜித், விஜய் உள்பட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தது மட்டுமில்லாமல் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தற்போது நிறைய படங்களில் பிசியாக நடித்துவருகிறார்.
இந்த நிலையில், யோகி பாபு நடித்து வரும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது, ஒரு கிடாயின் கருணை மனு, சத்திய சோதனை போன்ற படங்களை இயக்கிய சுரேஷ் சங்கையா இயக்கத்தில் யோகி பாபு நடித்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் நாளை வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
ஆர்.பி.டாக்கீஸ், பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோ மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஆகியவை இணைந்து தாயரித்துள்ள இந்த படத்தில் லவ்லின் சந்திரசேகர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், ஜார்ஜ் மரியன், ரேச்சல் ரெபெக்கா மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

error: Content is protected !!