Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

லாட்டரி விற்பனைக்கு மாதம் ரூ.5 லட்சம்… லஞ்சம் வாங்குவதாக கரூர் தவெக நிர்வாகி பரபரப்பு ஆடியோ

கரூரில், லாட்டரி வியாபாரிகளிடம் அதிகமாக பணம் வாங்க வேண்டும் என்றும், அரசு வழக்கறிஞராக நியமிப்பதற்கு ரூபாய் இரண்டு லட்சம் பணம் பெற்றுத்தருமாறு தவெக நிர்வாகியிடம் கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல்.

கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதி உள்ளடங்கிய கரூர் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளராக இருந்து வருபவர் பாலசுப்பிரமணி.

தற்போது இவர் மீது நிர்வாகிகள் பலரும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைமை அறிவிப்பின்றி இவர் தனக்கு வேண்டியவர்களை நிர்வாகிகளாக நியமித்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கட்சி நிர்வாகிகள் சிலர் உண்மையாக உழைத்தவர்களுக்கு மதிப்பில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தலைமை அறிவிப்பு ஏதும் இல்லாமல் பொதுச்செயலாளர் பெயரை பயன்படுத்தி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு 15 லட்சம் முதல் 20 லட்சம் வரை பணம் வேண்டும் என்று கூறிய ஆடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் பரவி வைரல் ஆனது.

இந்நிலையில் இன்று மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணி, குளித்தலையைச் சேர்ந்த தவெக நிர்வாகியிடம் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கரூர் மாவட்டத்திற்கு வருகை தருகிறார். அப்போது செலவு செய்வதற்காக ரூபாய் இரண்டு லட்சம் பணம் தேவைப்படுகிறது.

குளித்தலையைச் சேர்ந்த தவெக நிர்வாகி அமானுல்லாவை அரசு வழக்கறிஞராக நியமித்தால் அவர் இரண்டு லட்சம் பணம் தருவாரா? தற்போது என்னிடம் பணம் இல்லை. அவரை செல்போனில் தொடர்பு கொண்டு அல்லது நீதிமன்றத்திற்கு சென்று அவரை தனியாக அழைத்து இதனை கேட்குமாறு கூறிய ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் இதே போன்று குளித்தலை பகுதிகளில் லாட்டரி விற்பனையை மேற்கொள்ளும் நபர்களிடம் மாதம் தோறும் தங்களுக்கு இவ்வளவு பணம் வேண்டுமென்று அவர்களிடம் கூற வேண்டும் என்றும் தற்போது 1.60 லட்சத்திற்கு ரூ. 90000 கொடுத்துள்ளனர். மீதி 70,000 எப்பொழுது கொடுப்பார்கள். நான் பெரும்பாலும் அவர்களை கண்டுக்காமல் இருந்து கொள்வதுதான் ஏன் பணம் கொடுக்காமல் இருக்கிறார்கள்.

மேலும் கரூர் மாவட்டம் முழுவதும் மறைமுகமாக வியாபாரம் செய்து கொள்ள கூடிய நிலையில் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனுக்கு 5 லட்சம் ரூபாய் கொடுக்கின்றனர். நமக்கு ஏன் தராமல் இழுத்தடிக்கிறார்கள் என்று பேசும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

error: Content is protected !!