Skip to content
Home » பாஜக ஆட்சியில், தமிழக மீனவர்கள் மீது இலங்கை தாக்குதல் அதிகரிப்பு….. மு.க. ஸ்டாலின் பேச்சு

பாஜக ஆட்சியில், தமிழக மீனவர்கள் மீது இலங்கை தாக்குதல் அதிகரிப்பு….. மு.க. ஸ்டாலின் பேச்சு

  • by Senthil

ராமநாதபுரம் மாவட்டம்  மண்டபத்தில் இன்று மீனவர் நல மாநாடு நடந்தது. இதில்  முதல்வர்  மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.  அவர் பேசியதாவது:

மீனவர் நல மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களின் அன்பான அழைப்பை ஏற்று நான் இங்கு வந்திருக்கிறேன். பொதுவாக அரசு நிகழ்ச்சிகளில் மீனவர் சங்கங்களை இணைத்து கொள்ள மாட்டார்கள். அதேபோல் மீனவர்கள் மாநாடாக இருந்தால் அதில் அரசு அதிகாரிகள் இடம் பெற மாட்டார்கள்.

ஆனால் இந்த இரு தரப்பினரையும் இணைத்து இந்த மாநாட்டை அமைச்சர்கள் ஏற்படுத்தி உள்ளார்கள். மீன்பிடி தொழிலில் இந்தியாவிலேயே 5வது பெரிய மாநிலம் தமிழ்நாடு ஆகும். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மீனவர்களின் பங்கு தவிர்க்க முடியாதது. மீனவர்களுக்காக திமுக அரசு ஏராளமான திட்டங்களை செய்துள்ளது.  மீனவர்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய். டீசல் கருணாநிதி ஆட்சி காலத்தில் வழங்கப்பட்டது. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீனவர்களின் நண்பராக செயல்பட்டு வருகிறார்.

தமிழ்நாட்டை உலகோடு இணைத்தது கடல். மீன்பிடி தொழிலில் இந்தியாவிலேயே ஐந்தாவது பெரிய மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மீனவர்களின் பங்கு தவிர்க்க முடியாதது.  கடல் மீனவர்களுக்கு சேமிப்பு மற்றும் நிவாரண திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.  மீனவர்களுக்கான வீடு கட்டும் திட்டத்தின்கீழ், 5,035 பேருக்கு இலவச பட்டா வழங்கப்படும். மீன்பிடி தடைக்கால நிவாரணத்தொகை இனி ரூ.8,000 ஆக உயர்த்தப்படும்.

காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கான தினசரி உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. கடல் மீனவர்களுக்கு சேமிப்பு மற்றும் நிவாரண திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். கடல் மீனவ மகளிர் சேமிப்பு மற்றும் நிவாரண திட்டம் நடைமுறையில் உள்ளது. நாட்டுப்படகு மீனவர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டு, டீசல் வழங்கப்பட்டு வருகிறது. நாட்டுப்படகு மீனவர்களுக்கு இயந்திரம் வாங்க மானியம் வழங்கப்படுகிறது. பாஜக ஆட்சியில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தும் அடக்குமுறை அதிகரித்துள்ளது. எங்கெங்கு தூண்டில் வளைவுகள் சாத்தியமோ அங்கெல்லாம் தூண்டில் வளைவுகள் அமைக்க பணிகள் தொடங்கப்படும்.

இலங்கைக்கு கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதாக வரலாறு தெரியாமல்  சிலர் உளறிக் கொண்டு இருக்கிறார்கள். கச்சத்தீவுக்காக நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வெளிநடப்பு செய்த ஒரே கட்சி அதிமுகதான். தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் விஷயத்தை எப்போதும் அதிமுக தெளிவாக செய்கிறது.  கச்சத்தீவை தாரைவார்க்கக் கூடாது என டில்லி சென்று அப்போதைய முதல் அமைச்சர் கருணாநிதி வலியுறுத்தினார். கச்சத்தீவு இலங்கை அரசுக்கு உகந்ததாக எக்காலத்திலும் இருந்தது இல்லை என கருணாநிதி கடிதம் எழுதினார். இந்தியாவின் ஒரு பகுதியான கச்சத் தீவை மாநில அரசான திமுக தாரைவார்த்ததாக அடிப்படை அறிவு இன்றி பேசுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!