Skip to content

அதிராம்பட்டினம் நசுவினி காட்டாற்றில் மூழ்கி மீனவர் பலி..

  • by Authour

தஞ்சை, அதிராம்பட்டினம் காந்திநகர் பகுதியை சேர்ந்த மின்னல் வீரன், பிரியா தம்பதியரின் மகன் ஜெயகாந்தன் (வயது 24) இவரும், இவரது தாத்தா சுந்தர்ராஜ் இருவரும் கருங்குளம் நசுவினி காட்டாற்றில் குளிக்கச் சென்ற நிலையில் , ஆற்றுக்குள் இறங்கி குளிக்கும் பொழுது ஜெயகாந்தன் ஆற்றின் ஆழத்தில் சிக்கியுள்ளார். யேடுத்து ஜெயகாந்தனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர். அதனை தொடர்ந்து ஜெயகாந்தனின் உடல் பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு மேலும் இதுபற்றி அதிராம்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!