“சவுதி அரேபியாவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது தாக்குதலில் உயிரிழந்த மயிலாடுதுறையைச் சேர்ந்த மீனவர் மாவீரன் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதுகுறித்து பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் கோரிக்கை விடுத்தன. இதுகுறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறுகையில், “உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அங்கு விசாரணை நடைபெறுவதால் தாமதம் ஏற்பட்டுள்ளது” என்றார்.
