Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நடுக்கடலில் மீனவர்கள் மோதல்! நாகையில் பரபரப்பு….

நாகை மாவட்டம், தோப்புத்துறை அருகே நடுக்கடலில் இருதரப்பு மீனவர்களிடையே மோதல் ஏற்பட்டது.

கோடியக்கரை தென் கிழக்கே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்டத்தை சேர்ந்த இருதரப்பு மீனவர்களிடையே மோதல் ஏற்பட்டது.

நாகை மாவட்டம், தோப்புத்துறை அருகே  ஃபைபர் படகு மீனவர்கள் மீது இரும்பு குண்டுகளை வீசி, விசைப்படகு மீனவர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் செருதூரை சேர்ந்த ஃபைபர் படகு மீனவர்கள் 3 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நங்கூரமிட்டு இருந்த ஃபைபர் படகின் கயிற்றை, விசைப்படகு மாட்டி இழுத்துச் சென்றதாக மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இது தொடர்பாக கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!