Skip to content
Home » தேர்தல் முடிந்து விட்டதால்……பறக்கும்படை கலைப்பு…. மாநில எல்லைகளில் மட்டும் சோதனை

தேர்தல் முடிந்து விட்டதால்……பறக்கும்படை கலைப்பு…. மாநில எல்லைகளில் மட்டும் சோதனை

 

தமிழகம், புதுச்சேரி உள்பட 102 தொகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. மற்ற மாநிலங்களில் இன்னும் 6 கட்டமாக ஜூன் 1-ந்தேதி வரை தேர்தல் நடைபெற உள்ளன. இதன் காரணமாக தேர்தல் நடத்தை  விதிகள் இங்கு அமலில் இருக்காது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு பணம் மற்றும் பரிசு பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்களை தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கலைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கேரளா, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்டகோவை மாவட்ட எல்லைப் பகுதிகளான வாளையார், கோபாலபுரம் ஆகிய 2 சோதனை சாவடிகளில் தலா ஒரு நிலையான கண்காணிப்புக்குழுவினர் வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தாலும் வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட கூடாது என்பதால் தேர்தல் ஆணையம் பல்வேறு தளர்வுகளை செய்துள்ளது. அதன்படி இப்போது ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்ல முடியும்.

தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்து விட்டதால் வாகன சோதனையில் பணத்தை பறிகொடுத்தவர்கள் சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர்களை அணுகி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்து அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம். சென்னையில் மாநகராட்சி உதவி ஆணையர் உமா மகேஸ்வரி இதற்காக நியமிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் சமயத்தில் சென்னையில் 53 டீம் 3 ஷிப்டுகளாக ஆங்காங்கே வாகன சோதனை நடத்தி வந்தனர். இது இப்போது கலைக்கப்பட்டு விட்டது. ஒரு சட்டசபை தொகுதிக்கு ஒரு ஒரு பறக்கும் படை மட்டுமே உள்ளது. அவர்களும் முன்பு போல் பணத்தை பறிமுதல் செய்வதில்லை.

இந்த தவலை தமிழக   தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!