Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திமுகவில் இணைந்தார் முன்னாள் அதிமுக அமைச்சர் பெஞ்சமின்

தமிழகத்தின் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க.வின் திருவள்ளூர் மத்திய கிழக்கு மாவட்ட செயலாளராகவும் இருந்தவர் பெஞ்சமின். இவர் 1988-ம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். 2016 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற இவர், அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்தார்.2021 மற்றும் 2026 சட்டமன்ற தேர்தலில்களில் மதுரவாயல் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த பெஞ்சமின், கடந்த மாதம் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பெஞ்சமின் தி.மு.க.வில் இணைந்தார். அ.தி.மு.க. மாநில இளைஞரணி துணை செயலாளர் குழந்தைவேலுவும் இன்று தி.மு.க.வில் இணைந்துள்ளார்.

error: Content is protected !!