Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மறியல்: மாஜி அமைச்சர் ஆா்.பி. உதயகுமார் கைது

மதுரை அடுத்த திருமங்கலத்தில் இருந்து கொல்லம் செல்லும்  நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாக  மாற்றப்படுகிறது.  இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், எனவே  திருமங்கலம் அடுத்த ஆலம்பட்டியில் சுரங்கப்பாதை அமைத்து விட்டு  4வழிச்சாலை  பணியை தொடங்க வேண்டும் என  அதிமுக வலியுறுத்தி வந்தது.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி  இன்று ஆலம்பட்டியில்  முன்னாள் அமைச்சர் ஆா.பி. உதயக்குமார்   தொண்டர்கள் மற்றும் பள்ளி குழந்தைகளுடன்  சாலைமறியலில் ஈடுபட்டார். போலீசார் வந்து மறியலை கைவிடும்படி பேச்சுவார்த்தை நடத்தினர்.  இதில் முடிவு ஏற்படாததால்  உதயக்குமார் உள்ளிட்ட  சிலரை போலீசார் கைது செய்து  மறியலை  அப்புறப்படுத்தினர்.

error: Content is protected !!