Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகை அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிப்படுகொலை

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே தன்னாங்குடியை சேரந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ், இவர் இன்று காலை அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வரும் தனது மனைவியை பள்ளியில் இறக்கி விட்டு மீண்டும் பாக்குடி வழியாக வீடு திரும்பியுள்ளார். அப்போது பாக்குடி பெரிய குடும்பம்பட்டி சாலையில் இவரை வழிமறித்த மர்ம நபர்கள், தலையை துண்டித்து படுகொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.

இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இவருக்கும் பக்கத்து வீட்டில் வசித்து வரும் முத்துலட்சுமி என்பவருக்கும் ஏற்கனவே இட பிரச்சனை தொடர்பாக வழக்கு இருப்பதாகவும், இந்த வழக்கில் நாகராஜ் மீது இலுப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

மேலும் இந்த கொலைக்கான காரணம் இடம் சம்பந்தமான பிரச்சனையா அல்லது வேறு ஏதும் பிரச்சனையா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்ட நாகராஜ் ஏற்கனவே கோங்குடிபட்டி ஊராட்சி மன்ற தலைவராகவும் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!