Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கஞ்சா விற்ற 4 பேர் கைது- திருச்சி க்ரைம்

கஞ்சா விற்ற 4 பேர் கைது- திருச்சி க்ரைம்

கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையில் போலீசார் ரோந்து பணியில்தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அப்பொழுது
காந்தி மார்க்கெட் அருகில் உள்ள சூளக்கரை மாரியம்மன் கோவில் பகுதியில் சில வாலிபர்கள் கஞ்சா விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்தது இதையடுத்து இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையில் போலீசார் அங்கு சென்றனர்.அப்பொழுது அந்த இடத்தில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த நான்கு வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் தாராநல்லூர் வீரமாநகரை சேர்ந்த ஹரிஹரன் (வயது 20) வரகனேரி கல் பாளையம் பகுதியை சேர்ந்த சாம்ராஜ் (வயது 23) கல்மந்தை காலனி சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 25) பிள்ளைமா நகரை சேர்ந்த ரெனால்டு (வயது 19) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மேற்கண்ட நான்கு பேரையும் கைது செய்து அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

ஸ்ரீரங்கத்தில் புதுப்பெண் மாயம் -தந்தை போலீசில் புகார்

ஸ்ரீர ங்கம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் இவரது 24 வயது இளம் பெண்ணை தர்மபுரி மாவட்டம் போசம்பள்ளி பகுதியை சேர்ந்த ராஜேஷ் குமார் என்பவருக்கு கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து வைத்தார். இந்நிலையில் கடந்த 4ந்தேதி தர்மபுரியில் இருந்து மருத்துவ பரிசோதனை செய்வதற்காக அந்த இளம்பெண் திருவரங்கத்தில் உள்ள தந்தை வீட்டுக்கு வந்தார்.அங்கு தங்கியிருந்த அந்த பெண் அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். இதனை பார்த்த அவரது தந்தை பாஸ்கர் கண்டித்துள்ளார்.இந்நிலையில் கடந்த 6 ந் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற மகள் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. இதையடுத்து தர்மபுரியில் உள்ள கணவர் வீட்டுக்கும் அவர் செல்லவில்லை இதையடுத்து பாஸ்கர் திருவரங்கம் போலீசில் தன்னுடைய மகளை காணவில்லை கண்டுபிடித்து தருமாறு புகார் கொடுத்தார். இப்புகார் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து திருமணம் ஆன நான்கு மாதத்தில் மாயமான புதுப் பெண்ணை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!