திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே போதை மாத்திரை விற்ற 4 பேரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 190 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் போதை மாத்திரை விற்கப்படுவதாக திருவெறும்பூர் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் திருவெறும்பூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த வீரன் மகன் சந்துரு ( 20 )சமயபுரத்தைச் சேர்ந்த கோபால் மகன் தருண் (19) ஆகிய இருவரும் போதை மாத்திரை விற்றுக் கொண்டிருந்த பொழுது கையும் களவுமாக பிடித்துள்ளனர். அவர்களிடம் இருந்து 100 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
அதேபோல் திருச்சி முதலியார் சத்திரத்தை சேர்ந்த அபுதாஹிர் மகன் சையது முஸ்தபா (21) அப்துல் காதர் மகன் ஆருப்கான் (20 )ஆகியஇருவரும் போதை மாத்திரை விற்றுக் கொண்டிருந்த பொழுது கைது செய்ததோடு அவர்களிடமிருந்து 90 போதை மாத்திரைகளை திருவெறும்பூர் போலீசார் பறிமுதல் செய்தனர்
பின்னர் நான்கு பேரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
