திருச்சி பெரிய மிளகு பாறை பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து மண்டல அலுவலகத்தில் துணை மேலாளராக பணியாற்றும் சுரேஷ்குமார் என்பவர் கண்ட்ரோல்மென்ட் குற்றப்பிரிவு போலீஸில் புகார் கொடுத்துள்ளார் அந்த புகாரில்
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் எதுமலை இடைத்தெருவை சேர்ந்த தங்கராஜ் என்பவர் மகன் செல்வகுமார் கண்டக்டராக பணிபுரிகிறார். இவர் கடந்த 28.09.2016 அன்று, கண்டக்டர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் கல்விச் சான்றிதழ்களின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்கச் சென்றபோது, கடந்த 12.04.2018 அன்று இயக்குநரகம் தனது பதிலில், குற்றம் சாட்டப்பட்டவரின் 10 ஆம் வகுப்புச் சான்றிதழில் உள்ள மதிப்பெண்கள் மாற்றப்பட்டதாகவும், அவர் தனது 10 ஆம் வகுப்புச் சான்றிதழைப் போலியாகச் சமர்ப்பித்து மோசடி செய்துள்ளதாகவும் கூறியுள்ளது. இதுதொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் கூறியுள்ளார் இதை அடுத்து கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசார் கண்டக்டர் செல்வகுமார் மீது மோசடி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மூதாட்டியிடம் ரூ 85 ஆயிரம் மோசடி
திருச்சி திருவளர்ச்சோலை ராமச்சந்திரன் கிரீன் சிட்டி பகுதியை சேர்ந்தவர் சச்சிதானந்தம் இவரது மனைவி அமிர்தவல்லி (வயது 62) இவர் திருவரங்கம் பகுதியை சேர்ந்த ஒரு பத்திர எழுத்தரிடம் தன்னுடைய சொத்துக்களை அவரது மகனின் பெயருக்கு மாற்றம் செய்ய ஏற்பாடு செய்யுமாறு இரண்டு தவணையாககடந்த பிப்ரவரி மாதம் ரூபாய் 45 ஆயிரம் மற்றும் 40 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளார்.
பிறகு நீண்ட நாட்கள் ஆன நிலையில் அந்த பத்திர எழுத்தர் அமிர்தா வள்ளியின் மகனுக்கு சொத்துக்களை பெயர் மாற்றம் செய்யவில்லை.பணத்தையும் திருப்பி தரவில்லை. இதுதொடர்பாக அவரிடம் பணத்தை திருப்பி தருமாறு கேட்டபோது அமிர்த வல்லிக்கு கொலை மிரட்டல் கொடுத்ததாக தெரிகிறது.
இது தொடர்பாக அமிர்தவல்லி திருவரங்கம் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சம்பந்தப்பட்ட திருவரங்கம் பத்திரஎழுத்தர் மீதுவழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு திருவரங்கம் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து திருவரங்கம் குற்றப்பிரிவு போலீசார் சம்பந்தப்பட்ட பத்திரஎழுத்தர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
