தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தற்போதைய அரசை மின்சாரப் பற்றாக்குறை விவகாரத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னை பெரம்பூர் தொகுதி மின்வெட்டில் முதலிடத்தில் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தமிழக வெற்றிக் கழகத்தைச் (தவெக) சேர்ந்தவர்களே இந்த ஆட்சி குறித்து அதிருப்தியில் பேசி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி ஆற்றும் உரைகள், மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு தொடர்பான கொள்கை விளக்கங்கள், பல்வேறு திட்டங்களுக்கான நிதிக் கோரிக்கைகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார் செந்தில்பாலாஜி…
தவெக ஆட்சிக்கு வந்து ஒருமுறை கூட உயரதிகாரிகளை வைத்து ஆய்வு கூட்டம் நடத்தவில்லை. மின்பயன்பாடு அதிகரிக்கும் போது கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.
இப்போதுள்ள பணியாளர்கள் மூலமே கடந்த காலத்தில் சீராக மின்விநியோகம் செய்யப்பட்டது.
மின்விநியோக துறை அதிகாரிகள் கூட்டம் தற்போது வரை நடைபெறவில்லை. தற்போதுள்ள மின் ஊழியர்கள் எண்ணிக்கையில் தான் திமுக ஆட்சியில் தடையில்லா மின்சாரம். திமுக ஆட்சியில் 90,000 மின்மாற்றிகள் அமைக்கபட்டன, மாற்றப்பட்டன. மின்பயன்பாடு அதிகரிக்கும் பொது கூட்டமைப்புகள் உருவாக்க வேண்டும். எங்களுடைய துணை முதல்வர் சேப்பாக்கம் பகுதியில் பல்வேறு மின்திட்டங்களை தங்களுடைய திருகரங்களால் தொடங்கி வைத்திருக்கிறார். அனைத்து தொகுதியிலும், அனைத்து மின்திட்டங்களும் அந்த 5 ஆண்டுகளில் சிறப்பாக நிறைவேற்றப்பட்டன. 10 ஆயிரம் கோடியில் தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன என்று பத்திரிக்கை செய்தியில் இருக்கின்றன. இது எல்லாம் கடந்த காலங்களில் துவங்கப்பட்ட திட்டம். என்னென்ன கூடுதலாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கவனத்திலே இந்த அரசு எடுத்துக்கொள்ள வேண்டும். என்று இவ்வாறு தெரிவித்தார்.
