உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் ராம ஜென்ம பூமியில் உள்ள ராமர் கோவிலில் பாதுகாப்பு பணியில் 4 பெண் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் பணி நேரத்தில் இந்தி படப் பாடல்களை கேட்டுக்கொண்டும், அதில் ஒருவர் ஆட்டம் போட்டும் உற்சாகமாக பொழுதைப் போக்கி உள்ளனர். இதுபற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் நேற்று வெளியாகி வைரலானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தி அந்த பெண் போலீசார் 4 பேரையும் இடைநீக்கம் செய்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு முனிராஜ் நடவடிக்கை எடுத்துள்ளார்.