Skip to content
Home » கேங்ஸ் என்ற வெப் தொடர்… ரஜினியிடம் ஆசி பெற்ற சவுந்தர்யா ரஜினி….

கேங்ஸ் என்ற வெப் தொடர்… ரஜினியிடம் ஆசி பெற்ற சவுந்தர்யா ரஜினி….

  • by Senthil

நடிகர் ரஜினியின் மூத்தமகள் ஐஸ்வர்யா இயக்கத்தில், ‘லால் சலாம்’ திரைப்படம் உருவாகி வருகிறது. விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிக்கும் இதில் ரஜினிகாந்த், மொய்தீன் பாய் என்ற கவுரவ வேடத்தில் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில், ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா, கேங்ஸ் என்ற வெப் தொடரை தயாரித்து வருகிறார். ரஜினி, தீபிகா படுகோன் நடித்த ‘கோச்சடையான்’ என்ற அனிமேஷன் படத்தை சவுந்தர்யா இயக்கி இருந்தார். அதனை அடுத்து தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி-2’ படத்தை இயக்கினார். இதில் தனுஷுடன் இந்தி நடிகை கஜோல் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

தற்போது ‘GANGS’ வெப் தொடரை அமேசான் ப்ரைமுடன் இணைந்து தயாரித்து வருகிறார். அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கும் இந்த தொடரை நோவா ஆபிரகாம் என்பவர் இயக்கி வருகிறார். இந்த வெப்தொடரின் தொடக்கமாக நடிகரும் தந்தையுமான ரஜினிகாந்திடம் ஆசி பெற்றார் சவுந்தர்யா ரஜினிகாந்த்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!