Skip to content
Home » சென்னை அருகே…..போலீஸ்காரரை ஓட ஓட விரட்டிய கஞ்சா ஆசாமிகள்….. வீடியோ வைரல்

சென்னை அருகே…..போலீஸ்காரரை ஓட ஓட விரட்டிய கஞ்சா ஆசாமிகள்….. வீடியோ வைரல்

  • by Senthil

சென்னையை அடுத்த காட்டுப்பாக்கத்தில் கஞ்சா போதையில் 3 பேர் பொதுமக்களை தாக்கி அச்சுறுத்தி பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துவதாக  மாங்காடு போலீசாருக்கு   புகார் வந்தது. அதைத்தொடர்ந்து  ஒரு போலீஸ்காரர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்.

அவர் கஞ்சா பேர்வழிகளை பிடிக்க முயன்றார். அப்போது அவர்கள் 3 பேரும் போலீஸ்காரரை தாக்க முயன்றனர். இதைப்பார்த்த போலீஸ்காரர் ஓட்டம் பிடித்தார்.  இதைப்பார்த்த பொதுமக்கள் அச்சமடைந்தனர். இந்த காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.  சிறிது நேரத்தில்  மேலும் சில போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கஞ்சா ஆசாமிகள் 3 பேரையும் பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு சென்று கவனித்தனர். இப்போது 3 பேரும்  சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!