கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் முகம் நடைபெற்றது. இதில் கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். அப்போது மனுக்கள் பதிவு செய்யும் பகுதியில்

மாநகராட்சியின் குப்பை அள்ளும் வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது மேலும் அதே பகுதியில் குப்பை கொட்டி உள்ளது.
இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியதுடன், மனு அளிக்க வந்த முதியவர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். மக்கள் அதிகம் கூடும் முக்கிய இடத்தில் குப்பை வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் நேரங்களில் இதுபோன்ற அலட்சியங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
