முதல்வர் ஸ்டாலினின் அமைச்சரவையில் மகளிர் நலன் மற்றும் சமூகநலத்துறையின் அமைச்சராகப் பதவி வகித்து வரும் கீதா ஜீவன் உள்ளிட்ட அவரின் குடும்பத்தினர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு நாளை வெளியாகவிருக்கிறது. கீதா ஜீவனின் தந்தையும், 30 ஆண்டுக்காலம் தூத்துக்குடி தி.மு.க மாவட்டச் செயலாளராக அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்தவருமான என்.பெரியசாமி, கடந்த 1996 முதல் 2001-ம் ஆண்டு வரை தூத்துக்குடி தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருந்தார். அந்த காலகட்டத்தில் கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக பதவி வகித்தார். இந்நிலையில் கீதா ஜீவன் அவரது சகோதரர் ஜெகன் உள்ளிட்ட 5 பேர் மீதான வழக்கு விசாரணை நடந்து வந்தது.