Skip to content
Home » பிரசவத்தில் குழந்தை சாவு.. டாக்டர்கள் அலட்சியம் என கூறி ஜிஎச் கண்ணாடியை உடைத்த உறவினர்கள்..

பிரசவத்தில் குழந்தை சாவு.. டாக்டர்கள் அலட்சியம் என கூறி ஜிஎச் கண்ணாடியை உடைத்த உறவினர்கள்..

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கோட்டமேட்டை சேர்ந்தவர் வசந்தகுமார் மனைவி அபிநயா. இவர்களுக்கு கடந்த 10மாதங்களுக்கு முன்பு திருமணமாகி தற்போது நிறை மாத கர்ப்பிணி.  பிரசவ வலி காரணமாக முதல் பிரசவத்திற்காக நேற்று இரவு 9 மணி அளவில் குளித்தலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அபிநயாவிற்குள் நார்மல் டெலிவரி முறையில் குழந்தை பிறக்க வாய்ப்பு குறைவாக இருப்பதாக டாக்டர்கள் கூறியதாவல் இன்று அதிகாலை சிசேரியன் மூலம் குழந்தையை எடுக்க முயன்றனர். அப்போது வயிற்றில் இருந்த பெண் குழந்தை இறந்து விட்டதாகவும் தொப்புள்கொடி சுற்றியதால் மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் டாக்டர்கள் பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். தாங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கும் போது ஸ்கேன் செய்து பார்த்து குழந்தை நல்ல நிலையில் உள்ளதாக தெரிவித்ததாகவும் தற்போது அறுவை சிகிச்சைக்கு பின் குழந்தை மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தது விட்டதாக டாக்டர்கள் கூறுவதை ஏற்க முடியாது என்றும் டாக்டர்களின் அலட்சியம் காரணமாகவே குழந்தை இறந்ததாக ஒரு பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் மருத்துவர்கள் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் பிரசவ அறுவை சிகிச்சையின் கதவு கண்ணாடியை உடைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை போலீசார் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து புகார் அளித்த அபிநயா உறவினர்கள் கலைந்து சென்றனர்.  குளித்தலை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளதாகவும், பிரசவத்திற்கு வரும் பெண்கள் மற்றும் உறவினர்களிடம் மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவரும் ஒருமையில் பேசி நடந்து கொள்வதாகவும், பணியில் கவனக்குறைவாக உள்ளதாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!