Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெண்ணிற்கு வரன் பார்த்துவிட்டு காரில் திரும்பியபோது விபத்து… 2 பேர் பலி… 6 பேர் படுகாயம்..

தஞ்சை மாவட்டம, கும்பகோணத்தில் இருந்து கார் மூலம் 8 நபர்கள் கோவையில் பெண்ணிற்கு வரன் பார்ப்பதற்காக சென்றுள்ளனர் பின்னர் அங்கிருந்துதிரும்பிக் கொண்டிருந்தபோது கரூர் மாவட்டம் க. பரமத்தி அருகே லட்சுமிபுரம் பகுதியில் கார் மற்றும் எதிரே வந்த

கோழி ஏற்றி வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் காரில் வந்த (கௌரி 48) மற்றும் (கௌதம் 56) அண்ணன் தங்கை ஆகிய இருவர் சம்பவ   இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் 6 நபர்கள் படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.

சம்பவ இடத்தில் க‌.பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக கோவையில் பெண்ணிற்கு வரன் பார்த்துவிட்டு காரில் 8 நபர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வேனில் வந்த ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!