Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட்.. டில்லி- குஜராத் இன்று மோதல்…

முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. 5 அணிகள் பங்கேற்றுள்ள இப்போட்டி தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 9வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. டெல்லி அணி 3 ஆட்டத்தில் இரண்டு வெற்றி, ஒரு தோல்வி பெற்றுள்ளது. அந்த அணி 2வது வெற்றியை எதிர்நோக்கி உள்ளது. அந்த அணியில் மெக் லானிங், ஷபாலி வர்மா, ரோட்ரிக்ஸ், ஜோனாசென், ஷிகா பாண்டே, ராதா யாதவ், கேட்சி, தாரா நோரிஸ் ஆகிய வீராங்கனைகள் உள்ளனர். குஜராத் 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி, இரண்டு தோல்வி பெற்று உள்ளது. அந்த அணியில் டங்லே, ஹர்லீன் தியோல், கார்ட்னர், கிம் சுரேத், சுதர்லேண்ட் ஆகிய வீராங்கனைகள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!