கரூர் மாநகராட்சி, மூலக்காட்டனூரில் மாநகராட்சியின் குடிநீர் உந்து நிலையம் உள்ளது. குடிநீரில் கலப்பதற்காக கேஸ் குளோரினேசன் பகுதி இங்கு உள்ளது. இப்பகுதியில் நேற்றிரவு குளோரின் உருளையில் குளோரின் வாயுக் கசிவு ஏற்பட்டது. தகவல் அறிந்த கரூர் தீயணைப்பு வீரர்கள் அப்பகுதிக்கு விரைந்தனர்.
கரூர் மாவட்ட தீயணைப்பு மீட்புப்பணிகள் துறை மாவட்ட அலுவலர் ஜெகதீஷ் உத்தரவின்பேரில், உதவி மாவட்ட அலுவலர் சந்திரகுமார் தலைமையில், நிலைய அலுவலர் திருமுருகன் மற்றும் 11 தீயணைப்பு வீரர்கள் சுமார் 10 மணி நேரம் போராடி கரூர் மாநகராட்சியினருடன் இணைந்து குளோரின் வாயுக் கசிவை நிறுத்தி நிலைமையை சீர் செய்தனர். இதனால் பெரும் பாதிப்பு தடுத்து நிறுத்தப்பட்டது.