Skip to content
Home » ‘GOAT’ படப்பிடிப்பு தளத்தில் விஜய் ஸ்கேட்டிங்….

‘GOAT’ படப்பிடிப்பு தளத்தில் விஜய் ஸ்கேட்டிங்….

  • by Senthil

நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.  இத்திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் நடிகர்கள் பிரசாந்த் ,பிரபுதேவா ,மீனாட்சி சௌத்ரி, சினேகா ,லைலா, மோகன் ,ஜெயராம் ,வைபவ் , பிரேம்ஜி, யோகி பாபு உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர் .

tn

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை ,தாய்லாந்து,  பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து நடைபெற்றது. இறுதியாக இப்படத்தின் படப் பிடிப்பானது கேரளாவில் நடந்து முடிந்தது .அடுத்த கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடந்து வருகிறது.

இந்நிலையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் ரஷ்யாவில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஸ்கேட்டிங் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் டிரெண்டாக்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!