ராமநாதபுரம் பகுதியில் உள்ள குப்பைக்கிடங்கில் கண்டெடுக்கப்பட்ட 3.788 கிலோ தங்க கட்டிகள், 28 சவரன் நகைகள் மற்றும் ரூ.12.20 லட்சம் ரொக்க பணத்தை பிரித்து கொண்டதாக 5 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். சந்தேகத்தின் பேரில் பிடிபட்ட அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த நகை மற்றும் பணம் குப்பைக்கிடங்கில் கிடைத்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இவ்வளவு பெரிய அளவிலான தங்க கட்டிகள் குப்பையில் கிடைத்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இதன் பின்னணி குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
