தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.1,680 குறைந்துள்ளது. காலையில் சவரனுக்கு ரூ.120 உயர்ந்த நிலையில், மாலையில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,13,400-க்கும் ஒரு கிராம் தங்கம் ரூ.14,175-க்கும், விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கு விற்பனையாகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலை ஒரே நாளில் குறைந்துள்ளது வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
