தமிழகத்தில் தங்கம் விலை ஒருகிராம் தங்கம் ரூ.200 உயர்ந்து ரூ.14,100 -க்கும், சவரன் ரூ.1,600 அதிகரித்து ரூ.1,12,800-க்கும் விற்பனையாகிறது. நேற்று ஒரேநாளில் சவரனுக்கு ரூ.1,600 குறைந்த நிலையில், இன்று தலைகீழாக மாறி அதே விலையில் உயர்ந்து நகைப் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதேபோல், 1 கிராம் வெள்ளிரூ.10 உயர்ந்து ரூ270-க்கும், கிலோவுக்கு ரூ.10,000 அதிகரித்து ரு.2.70 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
