Skip to content
Home » நல்ல படங்களை எப்போதும் மக்கள் ஆதரிப்பார்கள்…தஞ்சையில் நடிகர் சசிகுமார் பேச்சு

நல்ல படங்களை எப்போதும் மக்கள் ஆதரிப்பார்கள்…தஞ்சையில் நடிகர் சசிகுமார் பேச்சு

  • by Senthil

பிரபல திரைப்பட நடிகரும் இயக்குனருமான நடிகர் சசிக்குமார் நடித்து அண்மையில் வெளிவந்துள்ள அயோத்தி திரைப்படம் தஞ்சாவூர் ராணி பேரடைஸ் தியேட்டரில் திரையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தஞ்சாவூரில் நடைபெறும் நந்தன் என்கிற புதிய திரைப்பட சூட்டிங்கில் கலந்து கொள்ள வந்தார்,  அப்போது அவர் ரசிகர்களுடன் சேர்ந்து  அயோத்தி படத்தை பார்த்தார். படம் முடிந்ததும் அவர்  கூறியதாவது: சாதி மதம் தாண்டி மனிதம் தான் முக்கியம், மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற விசயம் இந்த படத்தில் சொல்லப்பட்டுள்ளது, நிஜ வாழ்க்கையில் நடந்த, நடக்கின்ற எல்லோரும் கடந்து வந்துள்ள, செய்தியைத்தான் இந்த

படத்தில் சொல்லி இருக்கோம்,நல்ல படம் எடுத்தால் மக்கள் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை ,இந்த படத்தின் மூலம்  எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழர்கள் நாம் வட மாநிலத்தவர்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறோம் அதைத்தான் இந்த படத்தில் சொல்லப்பட்டுள்ளது,  இந்தக் கதை எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கின்ற ஒரு விசயம் தான், அயோத்தி என்பது எல்லோரும் கடந்து வந்திருக்கிறார்கள், இந்தப் படத்தில் வருவது போன்று துபாயிலும் ஒரு நண்பர் இறந்தவர்களை சமூக சேவையாக அடக்கம் செய்து வருகிறார், இது போல மதுரையிலும் ஒருவர் செய்து வருகிறார், எல்லாருடைய வாழ்க்கையிலும் கடந்து வந்த விசயம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் நடிகர் சசிகுமார், தஞ்சை மாநகராட்சியில் உள்ள தாய், சேய் நல கண்காணிப்பு மையத்திற்கு சென்று பார்வையிட்டார். தமிழ்நாட்டிலேயே தஞ்சை மாநகராட்சியில் தான் தாய், சேய் நல கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கர்ப்பிணி தாய்மார்கள், குழந்தைகள் ஆகியோருக்கான நல ஆலோசனைகள் வழங்கப்படுகிறது என்பது குறித்து மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி , மற்றும் ஆணையர் ஆகியோர் நடிகர் சசிகுமாரிடம் விளக்கினர்.  இதைக்கேட்ட சசிகுமார் மாநகராட்சிக்கு பாராட்டு தெரிவித்து விட்டு புறப்பட்டு சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!