Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரசு கவின் கலைக்கல்லூரி 175வது ஆண்டு விழா–முன்னாள் மாணவர்கள் சந்திப்பு-நடிகர் சிவகுமார் பங்கேற்பு

அரசு கவின் கலைக்கல்லூரி 175வது ஆண்டு விழா–நடிகர் சிவகுமார் பங்கேற்பு

அரசு கவின் கலைக்கல்லூரியின் 175 ஆவது ஆண்டு விழாவில் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

தொடக்க காலத்தில் இருந்து கல்லூரி காலம் வரை தான் வரைந்த ஓவியங்களை காண்பித்து அதன் பின் உள்ள கதைகளை சுவாரசியமாக எடுத்து கூரிய நடிகர் சிவகுமார்

சென்னை எழும்பூரில் உள்ள அரசு கவின் கலைக் கல்லூரியின் (Government College of Fine Arts) 175-வது ஆண்டு விழாவானது அக்கல்லூரி வளாகத்தில் முன்னாள் மாணவர்கள் இணைந்து இந்த விழாவை முன்னெடுத்தர்.

இந்த விழாவில் அக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் கலை இயக்குனர் பத்ம ஸ்ரீ. செவாலியே, தோட்டாதரணி மற்றும் நடிகர் சிவகுமார் மற்றும் அரசு கவின் கலை கல்லூரியின் முதல்வர் புகழேந்தி உள்ளிட்டோர் உடன் கல்லூரியின் முன்னாள் மாணவர்களும்,

ஆசிரியர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிகழ்வில் தொடக்கத்தில் அரசு கவின் கலை கல்லூரியின் முதல்வர் புகழேந்தி பேசியதாவது,

175 ஆவது ஆண்டை இந்த கல்லூரி நிறைவு செய்துள்ளது. இங்கு வந்துள்ள பத்ம ஸ்ரீ செவாலியே தோட்டாதரணி, இங்கு பழனிசாமியாக படித்து சினிமாவில் சிவகுமாராக நடித்த சிவகுமார்

உள்ளிட்ட அனைத்து படைப்பாளர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்

இந்நிகழ்ச்சி நடைபெற பலரின் பங்களிப்பு உள்ளது. இந்தியாவிலே முதல் முறையாக சென்னையில் தான் இந்த கவின் கலை கல்லூரி தொடங்கப்பட்டது. இங்கு படித்தவர்கள் வெவ்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வருகிறார்கள். இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என முன்னாள் மாணவர்கள் கேட்ட போது நானும் உடனே அனுமதி கொடுத்தேன். இங்கு வந்துள்ள அனைவரைக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

செவாலியே தோட்டாதரணி பத்ம ஸ்ரீ தோட்டாதரணி அவர்களின் மேடைப்பேச்சு

அனைவருக்கும் வணக்கம்

எந்த பாஷயைும் சரியாக வராது

எனவே நான் ஆங்கிலத்தில் பேசி கொள்கிறேன்

நான் இந்த கல்லூரியில் தான் எனது பயணத்தை தொடங்கினேன்

எனது ஆசிரியர்கள் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்தனர். சற்று சிரமாக இருந்ததாலும் எனது வாழ்க்கையில் சிறந்த அனுபவங்களை இந்த கல்லூரி எனக்கு கொடுத்துள்ளது. இங்கு வந்தாலே கல்லூரியின் நினைவுகள் தான் நியாபகம் வருகிறது என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் நடிகர் சிவகுமார் பேசியதாவது,

இந்தியாவிலே ஓவிய கல்லூரியில் 175 ஆவது ஆண்டு விழா நடைபெறுகிறது என்றால் அது இந்த கல்லூரி தான்

நான் பிரஷ் நம்பி சில காலம் தான் இருந்தேன்

ஆனால் இங்கு படித்தவர்கள் எல்லாம் பிரஷ் யை மட்டுமே இருந்தவர்கள்

24 வயதில் நடிக்க சென்று 40 மேற்பட்ட கதாநாயகி உடன் டியூட் பாட சென்று விட்டேன்

அதன் பிறகு வெளுத்து போய் தற்போது நடிப்பை விடுத்து பேச்சாளராக உள்ளேன்

நாங்கள் படித்த காலத்தில் தான் உழைப்பாளர் சிலையை வடிவமைத்தனர்.

என்னுடன் படித்த என சக மாணவர்களில் பல பேர் உயிர் உடன் இல்லை

என்னுடன் படித்த என் சக நண்பர்கள் பலர் மதுரையில் உள்ளனர். அங்கு அவர்கள் வீட்டில் தங்கி சாப்பிட்டு விட்டு மதுரையில் போய் பல ஓவியங்களை வரைத்து உள்ளோம்

நாங்கள் படிக்கும் போது 10 மணி நேரத்திற்கு மேலாக ஓவியத்தை வரைவோம்

எங்கள் ஊரில் நான் பிறந்தபோது பள்ளிக்கூடம் இருக்காது மின்சாரம் இல்லை கழிப்பறை இல்லை என கூறி 14 வயதில் எம்ஜிஆர் படத்தை வரைத்ததை அனைவருக்கும் காண்பித்தார்.

17 வயதில் வரைந்த பத்மினி படத்தையும் சிவகுமார் காட்டினார். அப்போது அது குறித்து 2006 ஆம் ஆண்டு சூர்யாவிற்கு கல்யாணம் அதற்கு முன்பு தான் பத்மினி அவர்களை சந்தித்த போது அவர்களுக்கு அதை பரிசாக கொடுத்தேன். அப்போது அவர் படத்தை பார்த்து நான் இவ்வளவு அழககாக இருந்தேனா என கூறினார். அதன் பிறகு சில காலத்தில் அவர் இறந்துவிட்டார் அப்போது நான் வரைந்த ஓவியம் தான் அவரது உடலுக்கு வைக்கப்பட்டு இருந்தது.

தனது தாயார் ஓவியம், நடிகர் ஜெமினி கணேசன் ஓவியம், எங்கோ தண்ணீர் இல்லாத காட்டில் ஜெமினி கணேசன் ஓவியம் வரைந்த தான் அவர் உடன் இணைந்து படங்களில் நடித்தேன். இப்போது அந்த படம் அவரது வீட்டில் மாட்டி வைக்கப்பட்டுள்ளது

1961 ல் அண்ணாசாலையில் உள்ள கடைகளை ஓவியமாக வரைந்ததை காண்பித்தார், ஸ்ரீரங்கம் கோயிலில் அமர்ந்து கோபுரத்தை வரைந்து வந்தேன் அப்போது பூணுல் போட்ட ஒருவர் கோயிலில் இருந்து வெளியே போக சொல்லிவிட்டார். வெளியே வந்து வரைந்த ஸ்ரீரங்க கோயில் கோபுரம் ஓவியத்தை காண்பித்தார்.

காஞ்சிபுரம் கோயில் பிரகாரம் ஓவியம், கிறிஸ்துமஸ் ஓவியம், இடது கையில் தனது நண்பரை வரைந்த ஓவியம், மகாபலிபுரம் கடல் சிற்பம் ஓவியம், water colour spot painting ல் வரைந்த ஓவிய கல்லூரி கட்டிடம், எழும்பூர் ரயில் நிலையத்தில் மூன்றாவது நடைமேடை ஓவியம், மதுரை டவுன், பசுமலை, ரயில்வே டிராக் ஓவியம், 1963 ல் திருவண்ணாமலைசென்று அங்கு உள்ள கோயில் கோபுரம், தீபம் ஏற்றும் மலை மீது ஏறி 8 மணி நேரம் வரைந்த கோயில் கோபுரங்களின் ஓவியம், ஜனாநிதிபதி ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்து அவரது ஓவியத்தை காட்டி அவரிடமே கையெழுத்து வாங்கினேன் என கூறி அதை காண்பித்தார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ என்னிடம் வந்து பெரியார் படத்தை வரைய வேண்டும் என கூறினார். அந்த ஓவியத்தை காண்பித்தார். ராஜாஜி படத்தை காண்பித்தார்.

காமராஜர் போல் ஒரு தலைவர் இனி தமிழகத்தில் இருக்க மாட்டார். தனது தாயார் வீட்டுக்கு குடிநீர் குழாய் இணைப்பை கொடுத்ததை வேண்டாம் என கூறியவர்.

மாதம் 120 ரூபாய் தாய் அவர்களுக்கு பணம் அனுப்புவார் முதல்வராக இருந்த காமராஜர்

நாளு ஜோடி சட்டை இரண்டு செருப்பு 140 ரூபாய் பணம் மட்டுமே இருந்த ஒரு முதலமைச்சர் தான் காமராஜர்

தங்கமே என் சாரமே என கண்ணதாசன் காமராஜரை பற்றி எழுதி இருக்கிறார்

என கூறி காமராஜ் படத்தை காண்பித்தார்

பெரியார் படத்தை கலைஞர் இடம் காண்பித்தேன் அப்போது அவர் என்னிடம் என் படத்தை எல்லாம் வரையவில்லையா நீ என கேட்டார் உடனே அவருக்கு தான் கலைஞர் படத்தை வரைந்து தான் அவருக்கு காண்பித்தேன்

நகைச்சுவை நடிகர்கள் இரண்டு பேர் இருக்கு தான் சிலை வைத்துள்ளார்கள் சார்லி சாப்ளின் கலைவாணர் உள்ளிட்ட இரண்டு பேருக்கு தான் சிலை வைத்து இருக்கிறார்கள் கலைவாணவர் படத்தை காண்பித்தார்

உயர்ந்த மனிதன் என்கின்ற திரைப்படம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத குடும்பப்படமாக இருந்தது அந்த படத்தில் தனக்கு வாய்ப்பளித்த நபரின் படத்தை ஓவியத்தை காண்பித்தார்

1974 ல் இயக்குநர் பாலசந்திரன் ஓவியத்தையும், நடிகர் நாசர் ஓவியத்தையும் காண்பித்தார். அவர் மறைவின் போது டெல்லியில் தமிழ் சங்கத்தில் மீட்டிங்கில் இருந்தேன். அடுத்த நாள் நான் நாகேஷ் வீட்டிற்கு சென்ற போது நான் வரைந்த ஓவியம் தான் அங்கு இருந்தது. தான் மதம் மாறி திருமணம் செய்து தவறு செய்துவிட்டேன் என நாகேஷ் கூறினார்.

இசைஞானி இளையராஜா ஓவியம், திருமலைநாயக்கர்மஹால் ஓவியம், புதுச்சேரி கடற்கரை ஓவியம்,

1972 ல் ஓவியம் வரைந்தது போதும் நடிக்க போலாம் என கூறி மும்பைக்கு சென்ற போது அங்கு வரைந்த ஓவியத்தை காண்பித்தார். அப்போது நடந்த சம்பத்தை நினைவு கூர்த்தார்.

மும்பையில் Gate வே பகுதியில் சென்று ஓவியம் வரையும் போது காவலர்கள் வந்து இங்கு வந்து எப்படி ஓவியம் வரையலாம் யார் அனுமதி கொடுத்தது இது defence பகுதி என கூறி காவலர்கள் எங்களை கைது செய்ய வந்தார்கள் அப்போது நாங்கள் வரைந்த ஓவியத்தை காண்பித்த போது அவர்களை எங்களை காபி சாப்பிட வாருங்கள் என அழைத்தார்.

என் பிள்ளைகள் சினிமாவில் இருப்பதால் நான் வரைந்த ஓவியத்தை புத்தக வடிவில் அமைத்து கொடுத்து இருக்கிறார்கள்

இந்த புத்தகத்தின் விலை 2 ஆயிரம் ரூபாய் மாணவர்கள் உங்களுக்கான 1000 ரூபாயில் இன்று ஒரு நாள் புத்தகம் விற்பனை செய்யப்படும்

இந்த நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் என தெரிவித்தார்.

error: Content is protected !!