Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் 45 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் தர்ணா!

திருச்சியில் 45 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் தர்ணா!

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட துணைத் தலைவர் ஜீவானந்தம் தலைமையில் 45 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் சி ஐ டி யு மாநகர செயலாளர் ரெங்கராஜன், அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் வெங்கடேச பாபு, மாவட்ட செயலாளர் பிரேம்குமார், மாநிலத் துணைத் தலைவர் செல்வராணி ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர். தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் டாப்ஸ் திட்டத்திற்கான விதிமுறைகளை உடன் வெளியிட்டு பழைய ஓய்வூதியத்
திட்டத்திற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.
சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரிந்துவரும் சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் முறையான காலமுறை ஊதியம் வழங்கி டாப்ஸ் உள்ளிட்ட பலன்கள் வழங்கிட வேண்டும்.
2002 ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்ட நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். தொகுப்பூயத்தில் பணிபுரியும் எம் ஆர் பி செவிலியர்கள் அனைவரையும் காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்ய வேண்டும். என்பன உள்ளிட்ட 45 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி உள்ளனர் முடிவில் மாவட்ட பொருளாளர் சிவசங்கர் நன்றி கூறினார்.

error: Content is protected !!