அகர்தலா: திரிபுராவில் உள்ள அரசு அலுவலங்கள் இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும் என்ற கொள்கை முடிவை அம்மாநில அரசு எடுத்தது. இந்த 5 நாட்களும் தினமும் 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை நேரமாக அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்பு வாரத்தின் 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகளில் அரசு அலுவலங்கள் செயல்பட்டு வந்தன.
