விஜய் ஆட்சியமைக்க வேண்டும் என ஒரு வாக்காளராக விரும்புகிறேன் என்று விஷால் தெரிவித்துள்ளார். அவரது X பதிவில், தமிழகத்தில் கவர்னர் ஆட்சிக்கு இடமில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தவெக அரசே அமைய வேண்டும் என்றார். மேலும், 2017-18 ஆம் ஆண்டுகளில் கோவா, கர்நாடகாவில் நடந்ததுபோல் தமிழகத்தில் விஜய் ஆட்சியமைக்க கவர்னர் வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் விஷால் வலியுறுத்தியுள்ளார்.

